இந்தியப் பாயிரம்
வட விமயம் தென்குமரி
ஆயிடைக்
குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல்
படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய;
வாழிய பாரதம் வாழிய பல்படை
வாழிய பன்மொழி வாழிய பல்வினை
ஆழிக் குமரியும் அண்ணல் இமயமும்
ஊழி ஊழி ஒன்றி வாழிய;
இந்தியத் துகளினை எப்பகை அவாவினும்
முந்துக போர்க்களம்,சிந்துக உயிரை;
சாதிப்பற்றும் சமயப்பற்றும்
காதல் அன்ன கட்சிப் பற்றும்
மோதல் இல்லா மொழியின் பற்றும்
அசை நீங்காக் காசுப் பற்றும்
பாசம் ஏறிய பதவிப் பற்றும்
நேசங் கலந்த ஈசன் பற்றும்
தேசப் பற்றுமுன் சிறு பற்றாகுக;
பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
மற்றோர் பற்று மனம் புகல் வேண்டா;
பெருமகன் காந்தி பிறந்த நாட்டில்
ஒரு மகன் நேரு உழைத்த நாட்டில்
இனமுறை என்னும் நன்முறை ஓங்குக
வன்முறை என்னும் சின்முறை ஒழிக;
அடிப்படை உரிமைகள் வடுப்படளின்றிக்
கொடுப்பன கொடுக்க கொள்வன கொள்க
எடுத்ததற்கெல்லாம் நிறுத்தம் விடுக்க;
முறையை அறத்தை மொழியை மதத்தைப்
பறைபடு தேர்தலில் பணயம் வையற்க;
பத்தோடு நான்கு பாரத மொழிகள்
ஒத்த நல் லுரிமையும் ஒருமையும் தழுவிப்
பாராள் மன்றம் பாங்கினில் ஏறுக;
பொது நல வினையைப் பொறுப்போடாற்றுக
எது நலம் வரினும் பொது நலம் செய்க
மக்கள் உழைப்பு மலையினும் ஓங்குக
தக்க நலமெலாம் சமநலம் ஆகுக;
கட்டுப் பாடெனும் கரவினைத் தளர்த்தி
முட்டப் பாடெனும் முடியை விலக்கித்
தட்டுப் பாடகலத தனி வழி காண்க;
பொய்யா வள்ளுவன் புகழ் சேர் நாட்டில்
மெய்யாச் சொல்லுவன் மெய்யாச் சொல்லுவன்
எய்யா இந்தியர்க்கு மெய்யாச் சொல்லுவன்
பேச்சிலும் ,எழுத்திலும் பெருமிதம் வேண்டும்
ஏச்சுரை,தாக்குரை எவர்க்கு வேண்டும்?
எய்திய உரிமையை இடித்துக் காக்கும்
செய்தித்தாள்கள் செம்மாந் தியங்குக;
வாக்கினை வேண்டி வாய்மை பிறழேல்
நாக்கினைக் காப்பான் நாடு காப்பான்
மதிதுப்பெசும் வல்ல்வம் பரவுக
மிதுத்திப் பேசும் விலங்கியம் படுக....
விழுப்பம் வேண்டின் எல்லா வினையிலும்
ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் வேண்டும்
இழுக்கம் செய்பவன் இந்தியன் ஆகான்:
பசியே இல்லாப் பல் வளம் சுரந்து
பிணியே இல்லாப் பெருநலம் பெற்றுப்
பகையே இல்லாப் பல் மறம் வீங்கி
வாழிய பாரதம்! வாழிய பாரதர்!
ஏழிசை தாங்கி வாழியப் பாரதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment