வ.சுப. மா.அவர்களின் நன்மொழி.................
1.புகழ் விருப்பம் தவறன்று;எனினும் அதற்குரிய
செயல் விருப்பம் வேண்டும்.
2.தளர்வு வருதல் இயல்பே;அதனை நிமிர்த்துக்
கொள்ளுதல் அறிவுடைமை.
3.தக்கோரால் மதிப்புப் பெறுவதே சால்பு.
4.வீம்பு சிறுபொழுது இருக்கலாம்.அது தானே விலக
வேண்டும்.இது குடும்பத்துக்குப் பண்பு.
5.நாள்தோறும் நெஞ்சினையும் தூய்மைக் குளியல்
செய்க.
6.தன்னை சூழ்ச்சியாகப் பிறர் பயன்படுத்திக்
கொள்ள இடங்கொடுத்தல் ஆகாது.
7.நன்றி மனிதப் பண்புகளுள் தலையாயது.
மனதைப் பண்படுத்துவது.
8.சிலவற்றைப் பொருட்படுத்தாமல் அலட்டிக்
கொள்ளாமல் இயல்பாக விட்டுவிடுவது வாழ்வு முறையுள் ஒன்று.
9.கவலை என்பது எண்ணங்களுள் ஓர் அலை.
10.பெருமை பொறுமையால் வலுப்பெறும்;பொறுமை
தெளிந்து துணியும் செயலால் வலுப்பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment