உ.வா.ச.
பார்காத்தார் ஆயிரம் பேர்;பசித்தார்க்காகப்
பயிர் காத்தார் ஆயிரம் பேர் பாலர்க்காக
மார் காத்தார் ஆயிரம் பேர் வாழ்ந்த நாட்டில்
மனங்காத்த தமிழ்த்தாய் 'என் உடமை எல்லாம்
யார் காத்தார்' எனக்கேட்க ஒருவன் அம்மா
'யான் காப்பேன்' என எழுந்தான் சாமிநாதன்
நீர் காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
நிலை காத்த மலைஇமய நெற்றி மேலான்
Friday, July 17, 2009
பாரி நிலையம் செல்லப்பனார்
பாரி நிலையம் செல்லப்பனார்....
பாரியெநுந் தமிழ் நிலையம் பதிப்பிற் கண்டான்
பாரி செல்லப்பா வென்று அழைக்கப்பெற்றோன்.
'யாரிவர்தாம்' எனக்கேட்கும் அமைதிச் சான்றோன்
யாவரினும் நாணயத்திற் புகழ்மை கொண்டான்
ஒரிஎனக் காரிஎன உலகு போற்ற
ஒரு நூறு புலவோர்க்கு வருவாய் செய்தோன்
மாரிஇவன் எனச் சொன்னால் உவமை போதா
மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா

ச.மெய்யப்பனார் வாழ்த்து....
பதிப்புச் செம்மல் ச.மெயயப்பனர் ......
பதிபபாளும் செம்மலான் ,பல்கலை தேர் வல்லாளன்
பல்லோர் நண்பன்
மதிப்பாளும் நிறுவனத்தான் வளர் தமிழின் கறையனையான்
மடிமை இல்லான்
குதித்தாளும் பெருமான்தன் குனித்தவடி மனத்தகத்தான்
குறிக்கோள் மிக்கான்
உதித்தாளும் ஞாயிறுபோல் ஒளிசிறந்து மெய்யப்பன்
உயர்ந்து வாழி.

அழகப்பர் மணிவிழா
அழகப்பர் மணி விழா வாழ்த்து....
பாரியைக் காரியைப் பாடல்சால் மாரியை
ஓரியை வென்ற உயரழகன் - தேரின்
எனை வகை ஈகைகள் இந்தியா எங்கும்
நினை வகை செய்தான் நிலத்து.
பாரியைக் காரியைப் பாடல்சால் மாரியை
ஓரியை வென்ற உயரழகன் - தேரின்
எனை வகை ஈகைகள் இந்தியா எங்கும்
நினை வகை செய்தான் நிலத்து.
கி.ஆ.பெ.முத்து விழா வாழ்த்து
கி.ஆ.பெ.விசுவநாதம் முத்து விழா வாழ்த்து....
இந்திப் பகைஞன் எழுபத்தைந் தாண்டினன்
முந்தி இனம் காக்கும் முத்தமிழன்- பிந்தி
வரு தமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும்
திரு விசுவநாதன் சிறப்பு
இந்திப் பகைஞன் எழுபத்தைந் தாண்டினன்
முந்தி இனம் காக்கும் முத்தமிழன்- பிந்தி
வரு தமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும்
திரு விசுவநாதன் சிறப்பு
Monday, July 13, 2009
எங்கள் தாயின் பெற்றோர்க்கு
6."எங்கள் தாயின் பெற்றோர்க்கு"
என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த
அன்னை முதல்வர் அடிபணிந்தோம் ; - பொன்னை
உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள்
நிறைவினர் நின்ற நெறி.
என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த
அன்னை முதல்வர் அடிபணிந்தோம் ; - பொன்னை
உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள்
நிறைவினர் நின்ற நெறி.
Sunday, July 12, 2009
இந்தியப் பாயிரம்
வட விமயம் தென்குமரி
ஆயிடைக்
குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல்
படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய;
வாழிய பாரதம் வாழிய பல்படை
வாழிய பன்மொழி வாழிய பல்வினை
ஆழிக் குமரியும் அண்ணல் இமயமும்
ஊழி ஊழி ஒன்றி வாழிய;
இந்தியத் துகளினை எப்பகை அவாவினும்
முந்துக போர்க்களம்,சிந்துக உயிரை;
சாதிப்பற்றும் சமயப்பற்றும்
காதல் அன்ன கட்சிப் பற்றும்
மோதல் இல்லா மொழியின் பற்றும்
அசை நீங்காக் காசுப் பற்றும்
பாசம் ஏறிய பதவிப் பற்றும்
நேசங் கலந்த ஈசன் பற்றும்
தேசப் பற்றுமுன் சிறு பற்றாகுக;
பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
மற்றோர் பற்று மனம் புகல் வேண்டா;
பெருமகன் காந்தி பிறந்த நாட்டில்
ஒரு மகன் நேரு உழைத்த நாட்டில்
இனமுறை என்னும் நன்முறை ஓங்குக
வன்முறை என்னும் சின்முறை ஒழிக;
அடிப்படை உரிமைகள் வடுப்படளின்றிக்
கொடுப்பன கொடுக்க கொள்வன கொள்க
எடுத்ததற்கெல்லாம் நிறுத்தம் விடுக்க;
முறையை அறத்தை மொழியை மதத்தைப்
பறைபடு தேர்தலில் பணயம் வையற்க;
பத்தோடு நான்கு பாரத மொழிகள்
ஒத்த நல் லுரிமையும் ஒருமையும் தழுவிப்
பாராள் மன்றம் பாங்கினில் ஏறுக;
பொது நல வினையைப் பொறுப்போடாற்றுக
எது நலம் வரினும் பொது நலம் செய்க
மக்கள் உழைப்பு மலையினும் ஓங்குக
தக்க நலமெலாம் சமநலம் ஆகுக;
கட்டுப் பாடெனும் கரவினைத் தளர்த்தி
முட்டப் பாடெனும் முடியை விலக்கித்
தட்டுப் பாடகலத தனி வழி காண்க;
பொய்யா வள்ளுவன் புகழ் சேர் நாட்டில்
மெய்யாச் சொல்லுவன் மெய்யாச் சொல்லுவன்
எய்யா இந்தியர்க்கு மெய்யாச் சொல்லுவன்
பேச்சிலும் ,எழுத்திலும் பெருமிதம் வேண்டும்
ஏச்சுரை,தாக்குரை எவர்க்கு வேண்டும்?
எய்திய உரிமையை இடித்துக் காக்கும்
செய்தித்தாள்கள் செம்மாந் தியங்குக;
வாக்கினை வேண்டி வாய்மை பிறழேல்
நாக்கினைக் காப்பான் நாடு காப்பான்
மதிதுப்பெசும் வல்ல்வம் பரவுக
மிதுத்திப் பேசும் விலங்கியம் படுக....
விழுப்பம் வேண்டின் எல்லா வினையிலும்
ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் வேண்டும்
இழுக்கம் செய்பவன் இந்தியன் ஆகான்:
பசியே இல்லாப் பல் வளம் சுரந்து
பிணியே இல்லாப் பெருநலம் பெற்றுப்
பகையே இல்லாப் பல் மறம் வீங்கி
வாழிய பாரதம்! வாழிய பாரதர்!
ஏழிசை தாங்கி வாழியப் பாரதம்

அறப்பாடல்கள்
அறப்பாடல்கள்......
1.பொதுவறங்கள்
உயிரினங்கள் வளமார உண்ணுமாக;
உடலுறுப்பு சொன்னபடி கேட்குமாக;
பயிரினங்கள் தழைஉரத்தால் வளருமாக'
பசுவினங்கள் இல்தோறும் பரவு மாக;
செயிரினங்கள் கல்வியினால் திருந்து மாக;
செய்தித்தாள் திரிபின்றிச் செப்பு மாக'
தயிரினங்கள் கைபட்டால் தகர்தல் போலத்;
தடைமனங்கள் திருக்குறளால் தளர்க மாதோ:
..................('உப்பங்கழி என்ற நாடக நூலிலிருந்து)
2. யாம் மதிப்பவை
தாய்காட்டும் தாய் மொழிக்கே முதன்மை வேண்டும்
தாராத அரசினையாம் மதிப்ப தில்லை;
தாய் நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும்
தடுமாறும் கட்சியை யாம் மதிப்பதில்லை;
ஓயவீட்டும் உழைப்புக்கே முதன்மை வேண்டும்
ஊழ் கூறும் சமயத்தை மதிபபதில்லை;
சேய்கூட்டும் படைப்பெருக்கே முதன்மை வேண்டும்;
செய்யாத நாட்டினை யார் மதிப்பர் அய்யா!
.....நெல்லிக்கனி என்ற நாடக நூலிலிருந்து.....
3.இயற்கைத்தொண்டு
நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை;
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை;
நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை;
நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை;
பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை;
பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை;
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்!
4.வள்ளல் அழகப்பர்
கோடி கொடுத்த கொடைஞன்;குடியிருந்த
வீடும் கொடுத்த விழுத்தெய்வம்-தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்;அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு
5.கலைப்புரட்சியாளன்--அண்ணாமலை அரசர்
நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்
நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
பெருங்கழகம் களத்து வைத்தான்;
இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
வெல்லாத செயலில்லை என்று போற்ற
விளங்கியவன் மன் அண்ணா மலையன் வாழ்க.
6.கலைப்புரட்சியாளன்--முத்தையவேள்
மணி காட்டும் கோபுரம்போல் உயர்ந்த நெஞ்சும்;
மலைகாட்டும் அகலம்போல் விரிந்த நோக்கும்
பணிகாட்டும் திருக்குறளிற்படிந்த வாழ்வும்
பதவியெலாம் படி போலக் கடந்த பாங்கும்
அணிகாட்டும் தாமரையாள் அடைந்த மார்பும்
ஆரையுமே உறவாக அணைக்கும் கையும்
பிணிகாட்டும் மருத்துவன் போல் பேணும் அன்பும்
பெற்ற தமிழ் முத்தையா வேள் பெரியோன் வாழ்க.
------------------------------------------------------------------------------------------------

வ.சுப.மா.வாழ்க்கை வரலாறு..
வ.சுப.மா.வாழ்க்கை வரலாறு...................
அண்ணாமலை எனப்பிள்ளைத் திருநாமங் கொண்ட மாணிக்கனார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைசிவபுரியில் 17-4-1917 -இல் சுப்பையா செட்டியாருக்கும் ,தெய்வானை ஆச்சிக்கும் மகவாய்த் தோன்றினார்.இளம் பருவத்திலே பெற்றோரை இழந்த இவர் தம் பாட்டனாரால் புரக்கப்பெற்றார்.பின் பர்மாவுக்குச் சென்று கடையிற் பணிபுரிந்த காலை பொய் கூறவேண்டிய கட்டாய நிலை ஏற்படவே அப்பணி துறந்து தமிழ் பயிலத் தொடங்கினார். பண்டிதமணி கதிரேசனார் முதல்யோர்தம் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பிற் பயின்று முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.சில திங்கள் அப்பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு மாணவராகவிருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப்பணியாற்றினார்.அப்பொழுதே தனிமையாகப் படித்துப் பி.ஒ.எல்., எம்.ஏ., பட்டமும் 'தமிழில் அகத்திணைக் கொள்கைகள்' பற்றி ஆய்ந்து பிஎச்.டி., பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபதாண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆகவும்,முதல்வராகவும் பணி புரிந்தார்.மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து, தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் ,தொண்டாற்றினார்.பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியேற்றுத் தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணை நின்றார்.திருவனந்தபுரத்தின் மொழிஇயற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'தொல்காப்பியத் தகைஞராகப் பணி செய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொன் விழாவில் இவர்க்கு டி.லிட்., பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.குன்றக்குடி ஆதீனம் 'முதுபெரும் புலவர்' என்னும் சிறப்புப் பட்டத்தையும், மேலைசிவபுரி சன்மார்க்க சபை 'செம்மல்' என்னும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின.அரசு இவர் மறைவுக்குப் பின் 'திருவள்ளுவர் விருது' வழங்கிச் சிறப்பித்தது.தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர் குழுவின் தலைவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்.தமிழகப் புலவர் குழுவிற்கும்,இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும்,மேலைசிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல.'காரைக்குடி தமிழ்ச் சங்கம்' நிறுவிச் சங்கவிலக்கிய வகுப்பு நடத்தியும் ,இளஞ்சிறார்க்கு "அறநூல்கள் ஒப்பித்தல் போட்டி" வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டு செய்தார்.தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.
வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் 'கொடைவிளக்கு' என்னும் கவிதை நூல் படைத்தார்.இவர் தம் தனிப்பாடல்களின் தொகுப்பு 'மாமலர்கள்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும் ,தமிழ்க்காதலும் இரு கண்களெனப் போற்றத்தக்கவை.தொல்காப்பியக்கடல் ,திருக்குறட்சுடர்,சங்கநெறி,காப்பியப்பார்வை,இலக்கியச்சாறு,தமிழ்க் கதிர்,தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள்.திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்து கொள்ள 'உரை நடையில் திருக்குறள்' என்னும் நூலை இயற்றி உள்ளார்.மணிவாசகர் பதிப்பக வெளியீடான 'கம்பர்' என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.தமிழ் யாப்பு வரலாறு ,தமிழில் வினைச் சொற்கள் ,தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும்.மன்பதையின் முன்னேற்றம் கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவியின் உரிமை,நெல்லிக்கனி,உப்பங்கழி,ஒரு நொடியில் என்பனவாம்.
இத்தலைமுறையில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர் செம்மல் மாணிக்கனார் 24.4.1989-இல் எதிர்பாரா வகையில் மறைவெய்தியது தமிழன்னையின் தவக்குறைவேயாம்.

Subscribe to:
Posts (Atom)